< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் ரூ 2.38 லட்சம் மோசடி
விழுப்புரம்
மாநில செய்திகள்

வாலிபரிடம் ரூ 2.38 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
20 July 2022 6:11 PM GMT

துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ 2.38 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம்

செஞ்சி தாலுகா அப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இலியாஸ்அலி மகன் இர்பான்அலி (வயது 26). இவர் வேலைக்காக வெப்சைட் ஒன்றில் பதிவு செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு இர்பான்அலியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாகவும், அந்த வேலையில் சேருவதற்கு செயலாக்க கட்டணம், பாதுகாப்பு வைப்பு தொகை, விசா பெறுவதற்கான கட்டணம், வரி ஆகியவற்றுக்காக பணம் கட்டுமாறு கூறியுள்ளார்.

இதனை உண்மையென நம்பிய இர்பான்அலி, செஞ்சி கிளையில் உள்ள வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட போன்பே மூலமாக அந்த நபர் கூறிய 2 வங்கிகளின் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 911-ஐ 9 தவணைகளாக அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், இர்பான்அலிக்கு வேலை ஏதும் வாங்கித்தராமலும் பணத்தை திருப்பிக்கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து இர்பான்அலி, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்