< Back
மாநில செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
20 Sept 2022 2:07 AM IST

திருச்சி விமான நிலையத்தில் ரூ.22½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செம்பட்டு:

காகித பொட்டலம்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் இருந்து பயணிகள் இறங்கி வரும் பகுதியில் காகிதத்தில் மடித்தவாறு ஒரு பொட்டலம் கிடைத்தது.

இது பற்றிய தகவல் சுங்கத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த சுங்கத்துறையினர் அந்த பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

452 கிராம் தங்கம் பறிமுதல்

பின்னர் அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது, அதில் சுமார் 452 கிராம் தங்கம் இருந்தது, தெரியவந்தது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் என்றும், அந்த தங்கத்தை யாரேனும் கடத்தி வந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்