< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் ரூ.22 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
|16 May 2024 5:38 PM IST
இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 1.8 கிலோ மற்றும் 1.4 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
சென்னை,
சென்னையில் ரூ.22 கோடி மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சென்னையில் நடந்த இரண்டு வெவ்வேறு சம்பவத்தில் கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 9ம் தேதி சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் இருந்து 1.8 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றுமொரு சம்பவத்தில் 1.4 கிலோ எம்டிஎம்ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக 4 வெளிநாட்டவர் உள்பட 5 பேரை கைது செய்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.