< Back
மாநில செய்திகள்
ரெயில் சேவைகளை பெற ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

ரெயில் சேவைகளை பெற ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
23 May 2023 8:44 AM IST

ரெயில் சேவைகளை பெற ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

ரெயில் சேவைகளை பெற ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும், 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதி வரை மாற்றி கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று முதல் செப்டம்பர் 30 தேதி வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை (10 நோட்டுகள்) வரை மாற்றி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ. 2,000 நோட்டுகளை பயன்படுத்தி ரெயில் சேவைகளை பெறலாம் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்