< Back
மாநில செய்திகள்
வளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி; தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது போலீசில் புகார்
சென்னை
மாநில செய்திகள்

வளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி; தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது போலீசில் புகார்

தினத்தந்தி
|
7 May 2023 4:44 PM IST

வளசரவாக்கத்தில் ரூ.20 லட்சம் மோசடி தி.மு.க. பெண் கவுன்சிலர் மீது போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை வளசரவாக்கம், திருவள்ளூர் சாலையை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 69). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தை விற்று வந்த பெரும் தொகையை வைத்திருந்தார்.

அப்போது சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 152-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான பாரதி மற்றும் அவரது தோழியான வனிதா ஆகியோர் தனசேகரனிடம் இருந்து மாதம் வட்டி தருவதாக கூறி ரூ.20 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி அசல் மற்றும் வட்டி தராததால் தனசேகரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வளசரவாக்கம் போலீசார் கடந்த ஆண்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் கவுன்சிலர் உள்பட 2 பேரும் தனசேகரனிடம் 2 மாதத்தில் பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாக எழுதி கொடுத்து விட்டு சென்றனர். ஆனால் தற்போது வரை பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக தனசேகரன் நேற்று மீண்டும் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்