< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
வீட்டில் தீப்பற்றியதில் ரூ.2¼ லட்சம்- 11 பவுன் நகைகள் எரிந்து நாசம்
|10 July 2023 2:42 AM IST
வீட்டில் தீப்பற்றியதில் ரூ.2¼ லட்சம்- 11 பவுன் நகைகள் எரிந்து நாசமானது.
தா.பேட்டை:
தா.பேட்டையை அடுத்த டி.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி புஷ்பராணி(வயது 47). சம்பவத்தன்று இவரது வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 11 பவுன் நகைகள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டு பத்திரம் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவைகளும் தீயில் எரிந்தது. இந்த சம்பவம் குறித்து புஷ்பராணி, ஜெம்புநாதபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.