< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.17 லட்சம் மோசடி
சிவகங்கை
மாநில செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.17 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
12 May 2023 6:38 PM GMT

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக ரூ.17 லட்சம் மோசடி

காரைக்குடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சோமு தெருவை சேர்ந்தவர் அஸ்வின் (வயது 29). இவரது வீட்டிற்கு காரைக்குடி தெற்கு தெரு மேல ஊரணி சந்து பகுதியில் வசிக்கும் காளிதாஸ்(45) என்பவர் தச்சு வேலை செய்வதற்காக வந்தார். அப்போது அஸ்வின் குடும்பத்தாருடன் அவருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அதன் மூலம் அஸ்வினை தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வேலைக்கு அனுப்புகிறேன். ஆனால் அதற்கு ரூ.10 லட்சம் செலவாகும் என்று கூறினார். பணத்திற்கு நாங்கள் முழு பொறுப்பு என்று காளிதாசும் அவரது மனைவி அலமு(36) இருவரும் நம்பிக்கையூட்டி பேசினர். இதன் காரணமாக அஸ்வின் குடும்பத்தார்கள் அஸ்வினுக்கும், அவரது சகோதரருக்கும் ஆஸ்திரேலியாவில் வேலைக்காக ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை கொடுத்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட காளிதாஸ் தான் கூறியபடி அவர்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவில்லை. தொடர்ந்து காலதாமதம் செய்து வந்தார்.

இதுகுறித்து கேட்டபோது. கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளனர். அதனால் லண்டனுக்கு அனுப்புகிறேன் என்று கூறி அது தொடர்பாக வேலைக்கான உத்தரவாத கடிதத்தினை கொடுத்துள்ளார். அது குறித்து அஸ்வின் விசாரித்த போது அவை போலியானது என தெரியவந்தது. உடனே அஸ்வின் மற்றும் அவரது குடும்பத்தார் காளிதாஸ் வீட்டிற்கு சென்று பணத்தையும், பாஸ்போர்ட்டுகளையும் திருப்பி கேட்ட போது காளிதாசும் அவரது மனைவி அலமுவும் ஆபாசமாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் காளிதாஸ் மற்றும் அவரது மனைவி அலமு ஆகியோர் மீது வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்