< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"ஸ்டேட் வங்கியில் 1.45 லட்சம் கோடி வராக்கடன்; கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" - சு.வெங்கடேசன் எம்.பி
|22 July 2022 10:36 PM IST
ஸ்டேட் வங்கி வராக்கடன் தகவலை குறிப்பிட்டு, கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன் உள்ளது. அவற்றில் 19000 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை குறிப்பிட்டு, கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஸ்டேட் வங்கியில் 8ஆண்டுகளில் 1.45 லட்சம் கோடி வராக்கடன். வசூல் ஆனது 19000 கோடி. மீதம் ஸ்வாஹா... கட்டத்தவறியவர்களின் பெயர்கள் ரகசியமாம்.
கல்விக் கடன், குறு நிதி கடன்களை வசூலிக்க கழுத்தில் துண்டைப் போடுவார்கள்... கனவான்கள் எனில் கழுத்துக்கு மேல் காண்பிக்க மாட்டார்கள்...இப்படியாக மக்கள் சேமிப்புகள் சூறை. கடைத் தேங்காய்கள் கார்ப்பரேட் பிள்ளையார்களுக்கு" என்று கூறியுள்ளார்.