< Back
மாநில செய்திகள்
சுவரொட்டிகள் ஒட்டிய 451 பேருக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை
சென்னை
மாநில செய்திகள்

சுவரொட்டிகள் ஒட்டிய 451 பேருக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை

தினத்தந்தி
|
22 Aug 2022 5:08 PM IST

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டிய 451 பேருக்கு ரூ.1.38 லட்சம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

சென்னையில் பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அதன்படி சென்னையில் கடந்த 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 300 அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.10 லட்சத்து 95 ஆயிரத்து 410 அபராதமும், அரசு, மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய 451 நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 100 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் போன்றவற்றை தவிர்த்து சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்