< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
முககவசம் அணியாதவர்களிடம் 8 நாட்களில் ரூ.13½ லட்சம் அபராதம் வசூல்
|15 July 2022 11:05 AM IST
சென்னையில் முககவசம் அணியாதவர்களிடம் 8 நாட்களில் ரூ.13½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும். முககவசம் அணியாவிட்டல் ரூ.500 அபராதம் என்றும் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் கடந்த 6-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை 8 நாட்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 682 நபர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 41 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. 13-ந்தேதியில் மட்டும் 342 நபர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் அபராதமாக மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.