< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல் - சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல்
|25 May 2023 10:51 PM IST
அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.
சென்னை,
விபத்துக்களை தடுக்கும் நோக்கில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 12,551 வழக்குகள் தீர்க்கப்பட்டு சுமார் ரூ.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய நீதிமன்றங்கள் ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.