< Back
மாநில செய்திகள்
வாலிபரிடம் ரூ.11 ஆயிரம் மோசடி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

வாலிபரிடம் ரூ.11 ஆயிரம் மோசடி

தினத்தந்தி
|
22 Jun 2022 6:33 PM GMT

வாலிபரிடம் ரூ.11 ஆயிரம் மோசடி தொடர்பாக வழக்குபதிவு செய்து வங்கி விவரங்களின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

கமுதி மண்டலமாணிக்கம் அருகே உள்ள எம்.பள்ளபச்சேரியை சேர்ந்தவர் முனியசாமி (வயது 32). தச்சுவேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 9-ந் தேதி இவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பெண் ஒருவர் சரண்யா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தனியார் நிதிநிறுவனத்தில் இருந்து கடன் வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முனியசாமி தனக்கு ரூ.50 ஆயிரம் கடன் தருமாறு கேட்டுள்ளார். அவரின் விவரங்களின் அடிப்படையில் ரூ.52 ஆயிரம் கடன் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்து அந்த கடன் தொகையை பெற உங்களின் பான்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வாட்ஸ்-அப்பில் அனுப்புமாறு தெரிவித்துள்ளார். இதனை நம்பிய முனியசாமி அவர் அளித்த செல்போன் எண்ணில் ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார். மீண்டும் 10-ந் தேதி தொடர்பு கொண்ட நபர் கடன் வழங்க ஆவண கட்டணம் என ரூ.2,500 மற்றும் பல காரணங்களை தெரிவித்து மொத்தம் ரூ.10 ஆயிரத்து 874-ஐ வங்கி கணக்கிற்கு பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து பணம் மட்டுமே கேட்கின்றனரே என்று சந்தேகம் அடைந்த முனியசாமி, அந்த எண்ணை தொடர்பு கொண்டு விசாரிக்க முயன்றபோது அது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முனியசாமி சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். ராமநாதபுரம் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குபதிவு செய்து வங்கி விவரங்களின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்