< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.10,500 அபராதம்
நீலகிரி
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.10,500 அபராதம்

தினத்தந்தி
|
27 July 2022 7:19 PM IST

கோத்தகிரியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.10,500 அபராதம் விதிக்கப்பட்டது.

கோத்தகிரி,

கோத்தகிரி பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்கள் ஓட்டியவர்கள், காப்பீடு மற்றும் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்கள் போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் ரோந்து சென்று வாகன சோதனை மேற்கொண்டனர். போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.4 ஆயிரத்து 700 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. மேலும் கார்களில் ஒட்டப்பட்டு இருந்த கருப்பு கூலிங் ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. நேற்று ஒரு நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்