கன்னியாகுமரி
நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி
|தக்கலை அருகே நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண், 2 குழந்தைகளுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
தக்கலை,
தக்கலை அருகே நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண், 2 குழந்தைகளுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடனாக வாங்கினார்
தக்கலை அருகே உள்ள கொற்றிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரஜிலின் மனோ. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தரணி (வயது33). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் தரணி வீட்டில் அருகே உள்ள பலரிடம் இருந்து நகை, பணம் போன்றவற்றை கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் அவற்றை திரும்ப கேட்டு வந்தனர்.
ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க தொடங்கினர்.
தலைமறைவு
இதனை அறிந்த தரணி தனது 2 குழந்தைகளுடன் தலைமறைவானார். இதுகுறித்து கொற்றிக்கோடு பகுதியை சேர்ந்த பிறேமா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் தரணி பலரிடம் இருந்து நகை மற்றும் பணமாக ரூ.10 லட்சம் வரை கடனாக பெற்று மோசடி செய்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் தலைமறைவான பெண்ணை தேடி வருகிறார்கள்.