< Back
மாநில செய்திகள்
ஆத்தூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாநில செய்திகள்

ஆத்தூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தினத்தந்தி
|
16 April 2023 4:49 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதிவழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நீரில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதிவழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், முல்லைவாடி கிராமம், வடக்கு காடு, சிலோன் காலனியைச் சேர்ந்த திரு.ரா.பிரவீன், த/பெ. ராமமூர்த்தி (வயது 20) என்ற கல்லூரி மாணவர், நேற்று தனது நண்பர்களுடன் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் கிராமம், ஜேடர்பாளையம் படுகை அணைப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த உயிரிழந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்