< Back
மாநில செய்திகள்
திருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1½ கோடி மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1½ கோடி மோசடி

தினத்தந்தி
|
8 Sep 2023 7:35 PM GMT

திருச்சியில் மூதாட்டியிடம் ரூ.1½ கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி உறையூர் ராமலிங்க நகரை சேர்ந்தவர் சடகோபன். இவரது மனைவி சாந்தா (வயது 85). கணவர் மற்றும் மகன் இறந்து விட்ட நிலையில் சாந்தா தனியாக வசித்து வந்தார். இவரது வங்கி கணக்கில் ரூ.90 லட்சம் பணம் இருந்தது. இதனை அறிந்து கொண்ட அவரது சகோதரர் மகள், மகன் ஆகியோர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து தனியார் வங்கி கணக்குக்கு அந்த பணத்தை மாற்றினால் கூடுதல் தொகை வட்டியாக கிடைக்கும் என கூறியுள்ளனர். இதனை நம்பிய சாந்தா வங்கி கணக்கை மாற்ற ஒப்புக்கொண்டார். அப்போது அவர்கள் போலி கையெழுத்திட்டு அந்த பணத்தை தங்களது வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர். பின்னர் அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் பல்வேறு கட்டங்களாக ரூ.19 லட்சத்து 99 ஆயிரத்து 994 -ஐ எடுத்துள்ளார். மேலும் வங்கி லாக்கரில் இருந்த 62 பவுன் நகைகளையும் எடுத்துள்ளார். இதில் நகை, பணம் என மொத்தம் ரூ.1 கோடியே 47 லட்சத்து 29 ஆயிரத்து 997-ஐ மூதாட்டியிடம் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சாந்தா உறையூர் போலீசில் புகார் செய்தார். பின்னர் மேல் விசாரணைக்காக மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்