< Back
மாநில செய்திகள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.1¼ கோடி மோசடி
திருச்சி
மாநில செய்திகள்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.1¼ கோடி மோசடி

தினத்தந்தி
|
6 Aug 2022 1:24 AM IST

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக டாக்டரிடம் ரூ.1¼ கோடி மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாக்டர்

மதுரை மாவட்டம் விராட்டிபத்து தேனி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது சென்னையில் உள்ளார்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு மர்ம நபர் இவரது இ-மெயில் முகவரிக்கு வெளிநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக வேலை வாங்கி தருவதாக ஒரு விண்ணப்பம் அனுப்பி இருந்தார். அதற்காக ரூ.1 கோடியே 17 லட்சம் கேட்டுள்ளார். இதனை நம்பிய விக்னேஷ் அந்த மர்ம நபருக்கு பல்வேறு கட்டங்களாக ரூ.1 கோடியே 17 லட்சத்தை அனுப்பி உள்ளார்.

சைபர் கிரைம் போலீசார் விசாரணை

பின்னர் வெகு நாட்களாகியும் அந்த மர்மநபர் எந்த ஒருவேலையும் வாங்கித் தரவில்லை. விக்னேசுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தி உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்