< Back
மாநில செய்திகள்
மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்கு பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
சென்னை
மாநில செய்திகள்

மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக்கொலை: பழிக்கு பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
10 July 2023 12:34 PM IST

மயிலாப்பூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்குமாநகரை சேர்ந்தவர் டொக்கன் ராஜா (வயது 45). பிரபல ரவுடி சி.டி. மணியின் கூட்டாளியான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், நேற்று மாலை சாந்தோமில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அவரை 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று டொக்கன் ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஏற்கனவே டொக்கன் ராஜா மீது 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதால் பழிக்கு பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா? கொலையாளிகள் யார்? என்பது குறித்து மயிலாப்பூர் துணை கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்