< Back
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் ரவுடி கைது
வேலூர்
மாநில செய்திகள்

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

தினத்தந்தி
|
28 Jun 2023 11:07 PM IST

ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

வேலூரை அடுத்த அரியூர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ராஜா என்ற எம்.எல்.ஏ. ராஜா (வயது 40). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடியாக வலம் வந்த அவரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், ஒரு குற்ற வழக்கில் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தார். இந்த நிலையில் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

--

மேலும் செய்திகள்