திருவண்ணாமலை
வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
|தச்சம்பட்டில் வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
வாணாபுரம்
தண்டராம்பட்டு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பிரம்மானந்தன் தலைமை தாங்கினார்.
பழையனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பறையம்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிரியர் சிவப்பிரகாசம் வரவேற்றார்.
இதில் 50-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மேலும் வயதுக்கு தகுந்தபடி தனித்தனியாக கபடி போட்டி நடந்தது.
இதில் உடற்கல்வி ஆசிரியர்கள் முகமது நபி, பாபு, சரவணன், கோவிந்தன், கிருஷ்ணமூர்த்தி, தண்டபாணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் சார்பாக வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் திவாகரன் நன்றி கூறினார்.