< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறையில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு
மாநில செய்திகள்

மயிலாடுதுறையில் பலத்த காற்று காரணமாக கடல் சீற்றம் - படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு

தினத்தந்தி
|
2 Feb 2023 11:38 PM IST

கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக செம்பனார்கோவில், திருக்கடையூர், சங்கரன்பந்தல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

அதே போல் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. மேலும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்