< Back
தமிழக செய்திகள்
அழுகிய நிலையில் ஆண் பிணம்
திருப்பத்தூர்
தமிழக செய்திகள்

அழுகிய நிலையில் ஆண் பிணம்

தினத்தந்தி
|
17 Sept 2023 8:09 PM IST

ஜோலார்பேட்டை அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த பச்சூர்- மள்ளானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்