< Back
மாநில செய்திகள்
சத்துணவுக்காக வழங்கப்பட்டதில்   அழுகிய முட்டைகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

சத்துணவுக்காக வழங்கப்பட்டதில் அழுகிய முட்டைகள்

தினத்தந்தி
|
3 Dec 2022 12:15 AM IST

சிங்கம்புணரி அருகே அரசு பள்ளிக்கு சத்துணவுக்காக வழங்கப்பட்ட முட்டைகளில் அழுகிய முட்டைகள் இருந்தன.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே அரசு பள்ளிக்கு சத்துணவுக்காக வழங்கப்பட்ட முட்டைகளில் அழுகிய முட்டைகள் இருந்தன.

சத்துணவு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.கோவில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் 170 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான சத்துணவு முட்டைகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்த முட்டைகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் துர்நாற்றம் அடித்தது. இதனை பார்த்த சத்துணவு அமைப்பாளர் ஷீலா உடனடியாக அழுகிய முட்டைகளை பயன்படுத்தாமல் சத்துணவு மேற்பார்வையாளர் மகாலிங்கத்திடம் தகவல் கூறினார்.

அதன்பேரில் மகாலிங்கம் அங்கு சென்று அழுகிய முட்டைகளை கைப்பற்றி மாற்று ஏற்பாடாக உடனடியாக வேறு நல்ல முட்டைகள் வழங்க ஏற்பாடு செய்தார்.

அழுகிய முட்டைகள்

இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்ரமணியன் கூறுகையில், இதுவரை இதுபோன்று நடந்ததில்ைல. லாரியில் வந்த முட்டை அட்டைகளில் அடியில் வைக்கப்படும் முட்டைகளில் சிறிது பெரிது என வைக்கப்படும்போது அதன் பாரம் தாங்காமல் முட்டைகளில் வெடிப்புகள் விழுகின்றன. இதனால் முட்டைகள் அழுகி துர்நாற்றம் வீசும் நிலை ஏற்படுகிறது. இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட முட்டையில் ஒரு சில முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மாணவர்களுக்கு வழங்காமல் தடுக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து நாமக்கல்லில் உள்ள சம்பந்தப்பட்ட முட்டை நிறுவனத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் முட்டைகளை பள்ளிகளுக்கு வழங்கும்போது முறையாக ஆய்வு செய்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்