< Back
மாநில செய்திகள்
வீட்டில் அழுகிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

வீட்டில் அழுகிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
2 Sept 2022 1:54 PM IST

வீட்டில் அழுகிய நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்த வழக்கில் கள்ளக்காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமை வெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது 36). தனியார் பஸ் டிரைவர். இவருடைய மனைவி அமுதா (30). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் அமுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான ஜோதீஸ்வரன் (23) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து அமுதா கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

தனது உறவினர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி தன் மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். இருப்பினும் மீண்டும் மீண்டும் அமுதா தனது கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் சென்றார். இந்த கள்ளக்காதலுக்கு உடந்தையாக சோழவரம் புதிய எருமை வெட்டிப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்கிற சிவபிரகாஷ் (23) இருந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளூர் பெரிய குப்பம் கம்பர் தெருவில் வீட்டை வாடகைக்கு எடுத்து அமுதாவும் ஜோதீஸ்வரனும், கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர். கடந்த 28-ந்தேதி அன்று அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த அந்த பகுதி மக்கள் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக தலைமறைவான கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன், உடந்தையாக இருந்த சிவப்பிரகாஸ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் அமுதாவும் ஜோதீஸ்வரனும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர். அவர்களது இல்லற வாழ்க்கை கசந்து தற்போது ஜோதீஸ்வரன் தனக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். நான் அவர்களுடன் சென்று வாழ போகிறேன். எனவே நாம் இருவரும் பிரிந்து விடலாம் என கூறியுள்ளார்.

அதை ஏற்றுக் கொள்ளாத அமுதா, நானும் தனது மகன், மகள் மற்றும் கணவனை விட்டு தான் உங்களுடன் வந்தேன். எனவே என்னை விட்டு பிரிய கூடாது நாம் இருவரும் ஒன்றாகவே இணைந்து வாழலாம் என தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதீஸ்வரன் அமுதாவை தரக்குறைவாக பேசிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் அமுதா அந்த வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

திருவள்ளூர் டவுன் போலீசார் அமுதாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஜோதீஸ்வரன், சிவா ஆகியோரை கைது செய்து திருவள்ளூர்கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்