< Back
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்..!
மாநில செய்திகள்

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்..!

தினத்தந்தி
|
23 Jun 2023 7:11 AM IST

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று (வெள்ளிக்கிழமை) நிறுத்தப்படுகிறது.

திண்டுக்கல்,

பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது. இதுமட்டுமின்றி விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.

இந்த ரோப்கார் சேவைக்காக, அடிவாரம் கிழக்கு கிரிவீதி மற்றும் மலைக்கோவிலில் நிலையங்கள் உள்ளன. காற்றின் வேகத்தை பொறுத்து ரோப்கார் சேவை இயக்கப்படுகிறது. காற்று அதிகமாக வீசும்போது அதன் சேவை நிறுத்தப்படும். இதேபோல் தினமும் ஒரு மணி நேரமும், மாதத்துக்கு ஒரு நாளும் பராமரிப்பு பணி நடைபெறும். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படுவது வழக்கம்.

அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் ரோப்கார் சேவை நிறுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்