பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
|பழனி முருகன் கோவிலில் மாதத்துக்கு ஒருநாள் ரோப்கார் சேவையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
பழனி,
முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது.
அதுமட்டுமின்றி விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சென்றுவர வசதியாக ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் உள்ளன. அதேபோல் தினமும் 1 மணிநேரம், மாதத்துக்கு ஒருநாள் என ரோப்கார் சேவையில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது. எனவே மாற்று வழிகளான மின்இழுவை ரெயில் மற்றும் படிப்பாதையை பயன்படுத்தி பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வரலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.