< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
|29 Nov 2023 7:23 AM IST
இன்று ஒருநாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனியில் மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒரு நாள், வருடத்துக்கு ஒரு மாதம் என பராமரிப்பு பணிக்காக ரோப்கார் நிறுத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த மாதத்துக்கான பராமரிப்பு பணி இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று ஒரு நாள் மட்டும் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மின் இழுவை ரெயில் மூலமாகவோ, படிப்பாதை வழியாகவோ மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என்று பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.