< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
பராசக்தி மாரியம்மன் கோவிலில் கயிறு குத்து திருவிழா
|2 May 2023 1:33 AM IST
பராசக்தி மாரியம்மன் கோவிலில் கயிறு குத்து திருவிழா நடைபெற்றது.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை பராசக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று கயிறுகுத்து திருவிழா நடைபெற்றது. காலை 7 மணி அளவில் பொங்கல் வைபவம் நிகழ்ச்சி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். முத்து செலுத்துதல், அக்னிசட்டி செலுத்துதல், கயிறுகுத்துதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். மாலை 6 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். வீதி உலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.