< Back
மாநில செய்திகள்
லெட்சுமாங்குடியில் தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
திருவாரூர்
மாநில செய்திகள்

லெட்சுமாங்குடியில் தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

தினத்தந்தி
|
30 Oct 2022 12:15 AM IST

லெட்சுமாங்குடியில் தீயில் எரிந்து கூரை வீடு நாசம்

லெட்சுமாங்குடியில் தீயில் எரிந்து கூரை வீடு நாசமாகியது. இதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

தீ விபத்து

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி கொரடாச்சேரி மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் சுந்தர் (வயது 40). கூலித்தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 4 மகன்களுடன் நேற்றுமுன்தினம் இரவு கூரைவீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நள்ளிரவு 1 மணியளவில் திடீரென கூரைவீடு தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த சுந்தர் மற்றும் குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினர். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்ைல. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்

இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த டிவி, கட்டில், கிரைண்டர், பீரோ மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், ஆவணங்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்