< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அரியலூர்
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
8 Jun 2022 12:33 AM IST

காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள ஆதிச்சனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவருடைய மனைவி கஸ்தூரி(வயது 20). இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கஸ்தூரிக்கும், செல்லபெருமாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. நேற்று முன்தினம் கஸ்தூரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்