< Back
மாநில செய்திகள்
குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
மாநில செய்திகள்

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் - முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

தினத்தந்தி
|
15 Sept 2023 3:50 PM IST

குலசேகரபட்டினத்தில் இருந்து விரைவில் ராக்கெட் ஏவப்படும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.

சென்னை,

இந்தியாவின் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடிவு செய்தது.

அதன்படி, நிலவியல் ரீதியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் பகுதி ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடம் என கண்டறியப்பட்டது. குலசேகரபட்டினம் அருகே கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை தொடங்கும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதளம் குறித்து முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், "குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. இன்னும் 400 ஏக்கர் நிலம் வரும் நவம்பர் மதத்திற்குள் ஒப்படைக்கப்பட உள்ளது. அதன்பின் கட்டுமான பணிகள் 12 மாதத்திற்குள் முடிவடையும். கட்டுமான பணிகள் முடிவடைந்ததில் இருந்து, குலசேகரபட்டினத்தில் ஓராண்டுக்குள் ராக்கெட் ஏவப்படும். அடுத்ததாக சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ராக்கெட் ஏவ தயாராக உள்ளது. தனியார் வருகையால் இஸ்ரோ வளர்ச்சி பாதிக்காது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்