< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்; கலைஞரின் கனவு நனவாகியுள்ளது - கனிமொழி எம்.பி
|28 Feb 2024 1:55 PM IST
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி,
தி.மு.க.எம்.பி கனிமொழி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் தலைவர் கலைஞரின் கனவு நனவாகியுள்ளது.
தொடர் கடிதங்கள், நாடாளுமன்றத்தில் கோரிக்கை, துறைசார் அமைச்சர்கள் - அதிகாரிகள் சந்திப்பு என பத்து ஆண்டுகால நம் விடாமுயற்சியால் இன்று அடிக்கல் நாட்டப்படும் இத்திட்டம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் உந்துசக்தியாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.