< Back
மாநில செய்திகள்
ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை

தினத்தந்தி
|
26 Sept 2023 1:20 AM IST

ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள மேலஉளூர் கிராமத்தில் கல்யாணஓடை வாய்க்கால் அருகே டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை சம்பவத்தன்று இரவு ஊழியர்கள் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து கடையில் இருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் குமார், ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஒரத்தநாடு மற்றும் திருவோணம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளின் சுவரில் துளையிட்டு மதுபாட்டில்களை கொள்ளையடித்து செல்லும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்