< Back
மாநில செய்திகள்
ஆர்.கே.பேட்டை அருகே தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆர்.கே.பேட்டை அருகே தொழிலாளி வீட்டில் நகை- பணம் கொள்ளை

தினத்தந்தி
|
14 Oct 2023 12:33 PM IST

ஆர்.கே.பேட்டை அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.42 ஆயிரத்தை மர்ம அசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). கட்டிட தொழிலாளி இவரது மனைவி கீதா (36). இவர்கள் இருவரும் மகள் சிவரஞ்சனியை வீட்டில் விட்டு விட்டு திருமலை கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்றனர்.

சிவரஞ்சனி பகல் நேரத்தில் மட்டும் வீட்டில் இருந்துவிட்டு இரவு நேரங்களில் வீட்டை பூட்டிக் கொண்டு அருகில் உள்ள பாட்டி வீட்டில் சென்று படுத்துக்கொண்டார். இந்நிலையில் திருமலைக்கு பாதயாத்திரை சென்ற கணவன்-மனைவி வீடு திரும்பினர். பின்னர் கீதா தான் காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசை கழட்டி பீரோவில் வைப்பதற்காக பீரோ உள்ள மாடி அறைக்கு சென்றார்.

அப்போது பீரோவில் சாவி போட்டு திறந்தபோது உள்ளே இருந்த லாக்கர் கதவு திறந்து இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். லாக்கரில் அவர் தேடி பார்த்தபோது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகளும், ரொக்கப் பணம் ரூ.42 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பூட்டி இருந்த வீட்டிலிருந்து தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்