< Back
மாநில செய்திகள்
ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறி; 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
28 Aug 2023 3:36 PM IST

ஆரணி அருகே கத்திமுனையில் சிறுவனிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகன் தில்லைராஜன் (வயது 18) என்பவனிடம் ரூ.500 ரொக்க பணத்தை கொடுத்து ஆரணி பஜார் வீதிக்கு சென்று பொருட்கள் வாங்கி வர அனுப்பியுள்ளார். அப்போது மாதவரம் கிராமத்தில் உள்ள ராஜேந்திரன் என்பவரது வீடு அருகே சென்று கொண்டிருந்தபோது 2 வாலிபர்கள் தில்லைராஜனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரொக்க பணத்தை பறித்துக் கொண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆரணி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 29), ஆரணி, கோமிட்டிபேட்டை பகுதியைச் சேர்ந்த ரபி (22) ஆகிய இருவரையும் கைது செய்து பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்