< Back
மாநில செய்திகள்
ஆடைகளை களைந்து அந்த கோலத்தில் அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும் கேடி லேடிகள்
திருப்பூர்
மாநில செய்திகள்

ஆடைகளை களைந்து "அந்த கோலத்தில்" அசந்த நேரத்தில் கொள்ளையடிக்கும் கேடி லேடிகள்

தினத்தந்தி
|
7 Jan 2023 11:46 AM IST

வீட்டின் உரிமையாளர் உஷாரானதால், தங்கள் ஆடைகளை எடுத்துக் கொண்டு இரு பெண்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி கிராமத்தில் சங்கரி என்பவருக்கு சொந்தமான தோட்டத்து வீடு ஒன்று உள்ளது.

சம்பவத்தன்று வீடு பூட்டப்பட்டு கிடப்பதை நோட்டமிட்ட 2 பெண்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

2 பெண்கள் யாராவது வருகிறார்களா ? என்பதை நோட்டமிடுவதற்காக காவலுக்கு வெளியே நின்றிருந்தனர் . பக்கத்து நிலத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அங்கு வருவதை பார்த்து காவலுக்கு நின்ற பெண்கள், ஆள் வருவதாக சிக்னல் கொடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

சந்தேகத்துக்கிடமான வகையில் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த இரு பெண்களையும் மறித்த அவர், நீங்கள் யார் ? வீட்டுக்குள் எப்படி சென்றீர்கள் ? என்று விசாரித்துள்ளார். உடனடியாக அந்த இரு பெண்களும் தங்கள் அணிந்திருந்த சேலையை சரியவிட்டதோடு ஆடைகளை களைந்து அந்த இளைஞரின் மு அரை நிர்வாணத்தில் நின்று அவரின் கவனத்தை திசை திருப்ப முயன்றதாக கூறப்படுகின்றது.

அந்த இளைஞர் உறைந்து நின்ற நிலையில் , அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் உஷாரானதால், தங்கள் ஆடைகளை எடுத்துக் கொண்டு இரு பெண்களும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரட்டிச்சென்று 2 பெண்களையும் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் சேலத்தைச் சேர்ந்த பார்வதி மற்றும் சித்ரா என்பதும் தீரன் படத்தில் வருவது போல பகல் நேரத்தில் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவில் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும், ஆள் நடமாட்டமில்லாததால் பகலிலேயே கைவரிசை காட்டியதாகவும் கூறப்படுகின்றது.

திருடச்செல்லும் இடங்களில் தங்களை ஆண்கள் யாராவது பிடித்தால், அவர்களது கவனத்தை திசை திருப்ப இந்த கேடி பெண்கள் தங்கள் ஆடைகளை களைந்து தப்பிப்பதை வாடிக்கையாக செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

தப்பியோடிய மற்ற 2 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். போலீசார் அந்த இரு பெண்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்