< Back
மாநில செய்திகள்
பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறை: நடிகை பாபிலோனாவின் சகோதரர் கைது
சென்னை
மாநில செய்திகள்

பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறை: நடிகை பாபிலோனாவின் சகோதரர் கைது

தினத்தந்தி
|
12 Oct 2022 9:49 AM IST

பணம் கேட்டு மிரட்டி கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதாக நடிகை பாபிலோனாவின் சகோதரரை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், புஷ்பா காலனியை சேர்ந்தவர் நடிகை மாயா. இவரது மகன் விக்னேஷ் குமார் (வயது 38), இவர் கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் சகோதரர் ஆவார். இவர் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், நேற்று முன்தினம் விருகம்பாக்கம் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் சேர்மதுரை என்பவரின் கடைக்கு சென்று அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் தர மறுத்ததால் கடையை அடித்து நொறுக்கி சூறையாடியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சேர்மதுரை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற விருகம்பாக்கம் போலீசார் தகராறில் ஈடுபட்ட விக்னேஷ் குமாரை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு பணியில் இருந்த போலீசாரிடமும் விக்கி போதையில் தகராறு செய்தார். இதையடுத்து விக்னேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்அவரை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகளில் விக்னேஷ் குமார் கைதாகி சிறையில் அடைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்