< Back
தமிழக செய்திகள்
வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது
வேலூர்
தமிழக செய்திகள்

வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது

தினத்தந்தி
|
2 Oct 2023 5:41 PM IST

கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் பணம் பறித்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

வேலூர் வள்ளலார் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36). இவர் வள்ளலார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் காய்கறி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இவரது கடையில் வாலிபர் ஒருவர் காய்கறிகள் வாங்கிவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றார். பணத்தை கேட்டதற்கு அவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,000-ஐ பறித்து சென்றார்.

இதுகுறித்து சத்யராஜ் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ரவுடி கார்த்தி என்கிற ஜோக்கர் கார்த்தி (32) கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, கொலை மிரட்டல் உள்பட 6 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்