< Back
மாநில செய்திகள்
சாலையோர வியாபாரிகள் பதிவு முகாம் 11-ந்தேதி வரை நீட்டிப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

சாலையோர வியாபாரிகள் பதிவு முகாம் 11-ந்தேதி வரை நீட்டிப்பு

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

சாலையோர வியாபாரிகள் பதிவு முகாம் 11-ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்

காரைக்குடி

காரைக்குடி நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் உதவி பெறும் வகையில் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது என காரைக்குடி நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- சாலையோர வியாபாரிகள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசால் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளில் 2022-23-ம் ஆண்டுக்கு புதிதாக கணக்கெடுப்பு செய்ததில் பதிவு செய்தவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படுகிறது. கணக்கெடுப்பில் விடுபட்டுள்ள சாலையோர வியாபாரிகள் உரிய விவரங்களுடன் நகராட்சி அலுவலக நகரமைப்பு பிரிவில் பதிவு செய்ய நகராட்சி மூலம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சாலையோர வியாபாரிகள் நலன் கருதி முகாம் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்