< Back
மாநில செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலையோர வியாபாரிகள்

தினத்தந்தி
|
14 Feb 2023 12:44 AM IST

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டனர்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியாபாாிகள் மற்றும் விற்பனையாளர்கள், தொழிலாளர்கள் சங்கத்தின் செயலாளர் ரெங்கராஜூ தலைமையில் அச்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மனுவில், பெரம்பலூர் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வெண்டிங் கமிட்டி தேர்தல் நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளை போலீசார் அப்புறப்படுத்துவதை நிறுத்த வேண்டும். வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

301 மனுக்கள்

கூட்டத்தில் கலெக்டர் கற்பகம், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 301 மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்