< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
சாமல்பட்டி ரெயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்
|17 Oct 2023 12:30 AM IST
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் ரெயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் தரைப்பாலத்தில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றக்கோரி சாமல்பட்டியில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர், வணிகர்கள் கடைகளை அடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர் இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.