< Back
மாநில செய்திகள்
மின்ஊழியர் மத்திய அமைப்பினர் சாலைமறியல் போராட்டம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மின்ஊழியர் மத்திய அமைப்பினர் சாலைமறியல் போராட்டம்

தினத்தந்தி
|
17 Feb 2023 12:45 AM IST

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலைமறியல் போராட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டம் கிருஷ்ணகிரி மின்சார வாரியத்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரில் நேற்று நடந்தது.

ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலி வழங்கிட வேண்டும். மின்துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வேண்டும். 56 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருகை பதிவேட்டினை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடந்தது.

90 பேர் கைது

போராட்டத்திற்கு கிருஷ்ணகிரி திட்ட தலைவர் துரை, துணைத் தலைவர் சதீஷ்குமார், திட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், லோகராஜ், ராஜாதேசிங்கு ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் சாமுடி, சிவசங்கரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்