தஞ்சாவூர்
நகைக்கடை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து சாலைமறியல்
|நகைக்கடை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து சாலைமறியல்
பட்டுக்கோட்டை தேரடித்தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் ரோஜா ராஜசேகரன். இவர் திருட்டு நகையை வாங்கி வந்ததாக கூறி திருச்சி கே.கே. நகர் குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் உமாசங்கரி தலைமையிலான போலீசார் கடையை சோதனை செய்தனர். கடையில் தங்க நகைகள் எதுவும் இல்லாததால் ரோஜா ராஜசேகரனை அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். பின்னர் ரோஜா ராஜசேகரன் மனைவி லெட்சுமியையும் போலீசார் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பட்டுக்கோட்டை பொற்கொல்லர் சங்கம், நகை கடை உரிமையாளர்கள் சங்கம் இணைந்து நகை கடைகளை அடைத்து நகைக்கடை உரிமையாளர் சங்க தலைவர் பெருமாள் தலைமையில் தேரடி தெரு முக்கத்தில் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவி ராஜ்சவுகானிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
பிறகு திருச்சி போலீசார் ரோஜா ராஜசேகரன், அவரது மனைவி லெட்சுமி ஆகிய 2 பேரையும் அழைத்து சென்றனர்.