தர்மபுரி
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரிபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
|ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மொரப்பூர்:
ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட முயற்சி
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஆர்.கோபிநாதம்பட்டி ஊராட்சி தளபதி நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி மற்றும் போலீசார், ஆர்.கோபிநாதம்பட்டி கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் மார்கண்டன், துணை தலைவர் சம்பத் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தளபதி நகரில் சுமார் 35 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து அலுவலர்களிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பரபரப்பு
எனவே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். மாவட்ட நிர்வாகத்துடன் பேசி வருகிற 1-ந் தேதிக்குள் நிறைவேற்றி தருவதாக போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியல் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.