அரியலூர்
ரூ.65¼ கோடியில் சாலை பணிகள்
|ரூ.65¼ கோடியில் சாலை பணிகள் தொடங்கின.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அணிக்குதிச்சான் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை - நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் பூவானிப்பட்டு முதல் கீழநெடுவாய் வரையிலான சாலைைய தரம் உயர்த்துதல் பணி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ரூ.5.25 கோடி மதிப்பீட்டில் பூவானிப்பட்டு முதல் கீழநெடுவாய் வரை சாலையை தரம் உயர்த்தும் பணியை தொடங்கி வைத்தார்.
இதேபோல் ஆண்டிமடத்தை அடுத்த விளந்தை கிராமத்தில் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் - மதனத்தூர் சாலையில் உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.