< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மைல்கல்லுக்கு படையலிட்டு ஆயுதபூஜை கொண்டாடிய சாலைப்பணியாளர்கள்
|22 Oct 2023 12:01 AM IST
மைல்கல்லுக்கு படையலிட்டு ஆயுதபூஜையை சாலைப்பணியாளர்கள் கொண்டாடினர்.
ஆயுத பூஜையையொட்டி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலர் நேற்று முன்தினமே தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஆயுத பூஜையை கொண்டாடினர். இந்த நிலையில் கரூர் மாவட்டம், புலியூர்-வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலைப்பணியாளர்கள் நேற்று காணியாளம்பட்டி அருகே செல்லாண்டிபுரத்தில் உள்ள மைல் கல்லை சுத்தப்படுத்தினர். பின்னர் அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்தனர். அதன்பிறகு சுண்டல், பொரிகடலை, தேங்காய், பழம் ஆகியவற்றை படையலிட்டனர். மேலும், சாலைப் பணிக்கு பயன்படுத்தும் பொருட்களை வைத்து தீபாராதனை காட்டி சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் சாலைப்பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.