< Back
மாநில செய்திகள்
சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்
விருதுநகர்
மாநில செய்திகள்

சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
3 Oct 2023 3:47 AM IST

சாலை பணியாளர்கள் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட என்ஜினீயர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பராமரிப்பு பணியாளர் சங்கத்தின் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்த இயக்கத்தின் போது மாவட்ட செயலாளர் ஜெயசீலன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் ஹபிபுல்லா இயக்கத்தை தொடங்கி வைத்தார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். இந்த இயக்கத்தின் போது சாலை பணியாளர்கள் 41 மாத பணிநீக்க காலம் பணிக்காலமாக மாற்றப்படும் என முதல்-அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் லியாக்கத் அலி சிறப்புரையாற்றினார். மாநில அரசு ஊழியர் சங்க முன்னாள் துணை தலைவர் கண்ணன் நிறைவுரையாற்றினார். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் ஆழ்வார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்