< Back
மாநில செய்திகள்
கூடலூர்-ஏகலூத்து இடையே தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்
தேனி
மாநில செய்திகள்

கூடலூர்-ஏகலூத்து இடையே தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
22 Oct 2023 3:00 AM IST

கூடலூர்-ஏகலூத்து இடையே தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூரில் இருந்து ஏகலூத்து வரையிலான 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை உள்ளது. இந்த சாலையில் கல்லுடைச்சான்பாறை, மணிக்கட்டி ஆலமரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப்பயறு, அவரை, மொச்சை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல் அப்பகுதியில் உள்ள தோட்ட விவசாயிகள் வாழை, தென்னை, திராட்சை, வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களையும், செவ்வந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பூச்செடிகளையும் சாகுபடி செய்துள்ளனர். மேலும் மா, புளி, இலவம் மர தோப்புகளும் அதிக அளவில் உள்ளன.

இந்த பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைப்பொருட்களை டிராக்டர், சரக்கு வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் கூடலூர்-ஏகலூத்து சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியது. இதனால் அந்த வழியாக விளைப்பொருட்களை கொண்டு ெசல்ல விவசாயிகள் சிரமப்பட்டு வந்தனர். எனவே கூடலூர்-ஏகலூத்து சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி, தற்போது கூடலூர்-ஏகலூத்து சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. சாலையில் மணல், ஜல்லிக்கற்களை கொட்டி தார்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்