< Back
தமிழக செய்திகள்
வடமதுரை ஒன்றியத்தில் ரூ.8 கோடியில் சாலை அமைக்கும் பணி
திண்டுக்கல்
தமிழக செய்திகள்

வடமதுரை ஒன்றியத்தில் ரூ.8 கோடியில் சாலை அமைக்கும் பணி

தினத்தந்தி
|
12 July 2023 2:30 AM IST

வடமதுரை ஒன்றியத்தில் ரூ.8 கோடியில் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

வடமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பாகாநத்தம், கொம்பேறிபட்டி, சித்துவார்பட்டி, மோர்பட்டி, பிலாத்து ஆகிய ஊராட்சிகளில் ரூ.7 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. இதில், வேடசந்தூர் எம்.எல்.ஏ. காந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பூமிபூஜை மற்றும் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வடமதுரை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பையன், நகர செயலாளர்கள் கருப்பன் (அய்யலூர்), கணேசன் (வடமதுரை), ஒன்றிய அவைத்தலைவர் முனியப்பன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுப்பிரமணி, ஆனந்தி அறிவுக்கண்ணன், ஜீவானந்தம், ஒன்றிய பொருளாளர் செந்தில்முருகன், மாவட்ட பிரதிநிதிகள் ராமசாமி, சுருளிராஜ், திருப்பதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரவியராஜ், ராஜரத்தினம், சந்திரா சாமுவேல், சிவசக்தி, பத்மா வேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவீந்திரன், ஏழுமலையான் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்