தேனி
போடியில் ரூ.6 கோடியில் சாலை விரிவாக்க பணி
|போடியில் ரூ.6 கோடியில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
ராமநாபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி, போடி வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு செல்லும் வகையில் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தநிலையில் போடியில் உள்ள தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ.6 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையொட்டி தற்போது போடி நகரின் நுழைவு பகுதியில் உள்ள சாலை காளியம்மன் கோவில் அருகே உள்ள சாலை குறுகலாக உள்ளதால், அதன் அருகே உள்ள வாய்க்கால் பகுதியில் பாலம் அமைத்து சுமார் 3 அடி அளவில் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் மற்றும் மின் கம்பங்கள், தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டு, பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சாலை விரிவாக்கம் செய்யும் பணி, போடி நகரில் சாலை குறுகலாக 4 இடங்களில் நடைபெற உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.